With Gods Grace we were able to overcome the hurdles we had and completed the closing of the property on March 6th, 2009. The elders of Atlanta Tamil Church were present at the attorney’s office in full strength to complete the formalities and get the keys to the church. Please continue to pray and support the Atlanta Tamil Church as we transition into the new church building in the coming months. We will keep you posted above the move and church building. The elders have decided to conduct a survey among the members to get some feedback about the church timings in the new facility.
Here are some of the pictures taken during the closing and at the new church.
The Pastor & Elders would like to thank all those who prayed and offered their support to acheive this big step in the history of our Church.
“இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார்”
இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்
(பாஸ்டர். பால்மர் பரமதாஸ்)
உலகத்தில் பாவம் பெருகினபோது பாவத்திற்குரிய தண்டனையை பாவம் செய்த மக்களுக்கு அளிக்காமல் மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக விலங்குகளையும் பறவைகளையும் மக்கள் பலி செலுத்தி வந்தனர். அதன் காரணமாக அப்பாவி விலங்குகள், பறவைகள் உயிரை விட்டன. இந்த நிலைமை மாறி மனிதனைப் பாவ வழியை விட்டுத் திருத்தும்படிக்கு பல தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும், தீர்க்கதரிசிகளையும் இறைவன் உலகிற்கு அனுப்பினார்.
மனிதர்களோ இறைப்பணியாளர்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமலும் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளை நிராகரித்தும் ஜீவித்து வந்தனர். தொன்று தொட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையும் குறையவில்லை. பாவம் செய்கிற மனிதர்களுக்காக ஏன் ஒரு விலங்கு மரிக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டிய இடத்தில் அப்பாவி விலங்குகள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாவம் செய்த மனிதன் தண்டிக்கப்படுவது தானே உலக நீதி!. தேவனோ அன்பின் வடிவானவர்; அன்பே உருவானவர். அவர் பாவம் செய்கிற மனிதர்களையோ, அவர்களுடைய பாவங்களுக்காக அப்பாவி விலங்குகளையோ தண்டிக்க விரும்பாமல் பாவிகளை மன்னித்து, அவர்களுடைய பாவங்களை நீக்கி, பாவம் செய்வதற்கு காரணமாயிருக்கின்ற சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாக்கவும் அவர்களுக்கு நன்மை செய்யவும் அவர்களுக்கென பலியிடப்படவும் ஒரு நிரந்தர பலியாக மரிக்கும்படி, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.
தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும் மனிதர்கள் நம்பாமல் போனதால் இயேசு கிறிஸ்து தாமே அவர்களுக்காக மரிக்கும் முன்பு அவர்களுக்கு அறிவு புகட்டவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் அநேக ஞான உபதேசங்களையும், நல்வழிக்கதைகளையும், உவமைகளையும் சொல்லி வந்தார். ஆனாலும் மனிதர்கள் பாவம் செய்வதையும்,பிறருக்கு தீமை செய்வதையும் விட்டு விடவில்லை. ஏன் இயேசு கிறிஸ்துவையே அவர்கள் குற்றங்கண்டுபிடித்தார்கள். அவருக்கு விரோதமாக அவதூறான வார்த்தைகளைப் பேசி வந்தார்கள். அவரை தேவ குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் அவரை விசுவாசிக்காமல் போனார்கள். அப்படியே மனிதர்கள் தங்களைப் படைத்த தேவனையே புறக்கணித்தார்கள். மனிதர்களை தண்டிக்காமல் மக்களுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவே பலியாக மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய முடிவான தீர்மானமாயிற்று.
சுய நீதியின் சுயரூபம், மூத்தமகன்!
(பாஸ்டர் பால்மர் பரமதாஸ்)
குடும்பத்தின் பிள்ளைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனாலும் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பது தானே ஒவ்வொரு பெற்றோரின் கனவாயிருக்கும். இரண்டு பிள்ளைகள் என்பது இரண்டு கண்கள் போலத்தானே! அதில் எந்த கண்ணை வெறுத்து எந்த கண்ணை நேசிக்க முடியும்? சுண்ணாம்பும் வெண்ணெயும் பார்க்க ஒரே போல் இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெயையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிற பெற்றோர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. பிள்ளைகள் நம் அன்பிற்குரியவர்களாயிற்றே!
ஒரு மகன் ஊதாரியாக இருந்தாலும் அவனை வெறுத்து விடுகிற தகப்பனையோ தாயையோ பார்ப்பது மிகவும் அரிது! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! அப்படியாக லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் 15ம் அத்தியாயம் 28 முதல் 32 வரையுள்ள வசனங்களில் ஒரு மூத்த குமாரனைப்பற்றி நாம் வாசிக்கிறோம். திரும்பி வந்த இளைய மகனை ஏற்றுக் கொண்டான் தகப்பன். அதைக்குறித்து இதற்கு முந்தைய செய்தியாகிய “திருந்தி வந்த இளைய மகன்” இல் வாசிக்கிறோம். அதைக் கண்ட மூத்த மகனோ கோபமடைகின்றான். தகப்பனுக்கு தன் இளைய மகனுடைய வரவில் சந்தோசப்படவா? இல்லை இவ்வளவு நாளும் தன்னோடிருந்த மூத்த மகனுடைய மூர்க்கத்தை மூடவா? என்று என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தான். மூத்தமகனை உள்ளே வருமாறு தகப்பன் வருந்தி அழைக்கிறான். மூத்த மகனோ வரவில்லை. அப்பொழுது தகப்பன் மனம் எப்படி துடித்திருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
தன் இளைய மகன் தன்னை விட்டுப் போன போது அவனைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த தகப்பனுக்கு மூத்த மகன் ஆறுதல் அளித்து, உற்ற துணையாக இருந்தது உண்மை தான். அப்படி தகப்பன் மன வேதனைப்பட்ட போது அவனுக்கு ஆறுதல் சொன்னவன், இப்பொழுது தகப்பன் சந்தோசப்படும் போது தள்ளி நிற்பது ஏன்? “மகனே நீ என்னோடு எப்போதும் இருக்கிறாய். ஆனால் உன் தம்பியோ காணாமல் போனவன் திரும்பி வந்து விட்டான்” என்று தகப்பன் சொல்லக் கேட்டவன் தன் தம்பி திரும்ப வந்ததற்காக சந்தோசப்பட்டிருக்க வேண்டியதிருக்க துக்கப்படுவது ஏன்? “நாம் சந்தோசமாயிருக்க வேண்டுமே” என்று கூறிய தகப்பனின் தொனியில் ஒரு உண்மை தெரிகிறது. அப்படி சந்தோசப்படுவது நியாயம் தானே என்று சொல்லுகிற தகப்பனின் சந்தோசத்தை நிறைவேற்றாமல் தகப்பனுடைய சந்தோசத்தைக் கண்டு மனம் வெதும்புவது எப்படி சரியாகும்? என்பது தான் அந்த உண்மை.
“என்னுடையதெல்லாம் உனக்குரியது” என்று வாக்குரைத்த தகப்பனின் வாக்கை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவன் இந்த மூத்த மகன். நமக்கென்று நம் தகப்பன் எதை வைத்திருக்கிறானோ, அதை நம்மைத் தவிர யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. திரும்பி வந்த தம்பிக்கு தகப்பன் தன் சொத்தைக் கொடுத்து விடுவானோ என்று சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த சந்தேகத்தையும் தெளிவாக்கும் விதத்தில் அமைந்தது தகப்பனுடைய வாக்குறுதி. தன் தம்பியை மீண்டும் வீட்டில் சேர்த்தது தகப்பன் செய்தது தவறு என்று நினைப்பதன் மூலம் நல்லது செய்கிற தகப்பனுடைய சுதந்திரத்தையும் இரண்டு குமாரர்களையும் ஒன்று போல நேசிக்கிற தகப்பனுடைய அன்பையும் தன் சுய நன்மைக்காக எதிர்பார்ப்பது போல் இருக்கிறதல்லவா
தவறே செய்யாத பரிசுத்தவான்கள் யாரும் இந்த உலகில் இல்லை. நாம் செய்த எத்தனையோ தவறுகளை உணர்ந்து திருந்தி வருகிறவேளையில் நம் தகப்பன் நமக்கு மன்னித்தாரல்லவா! தவறு செய்த யாராக இருந்தாலும் அவர்களை மன்னிப்பது தானே மகான்களுடைய குணாதிசயம்! அப்படிப்பட்ட தகப்பனுடைய குணத்தை நானும் பெறாமல் போனதென்னவென்று எண்ணாமல் இருப்பது எப்படி சரியாகும்? பிறருடைய தவறுகளை நாம் திருத்துவது என்பதும் அதை விமரிசிப்பது என்பதும் வெவ்வேறு வித்தியாசமான காரியங்கள். திருத்துவதும் அவர்கள் திருந்த உதவுவதும் நல்லது. அதை விட்டு விட்டு விமரிசிப்பதற்க்கு காரணம் சுயநீதி என்ற சுயநலமே!
வேதாகமத்தில் கூறப்பட்ட இளையமகனைப் பற்றி அநேகர் அறிய வாய்ப்பில்லை; ஆனால் கெட்டக்குமாரனை அறியாதோர் யாருமேயில்லை. கெட்டக்குமாரனென்று பொதுமக்களாலும் வேதப்பண்டிதர்களாலும் முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இளைய மகனைப் பற்றிய உவமையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அறிவூட்டுகிற நோக்கோடு பரி. லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் 15-ம் அத்தியாயம் 11- 32 வசனங்களில் சொல்லியிருக்கிறார்.
ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அதில் இளைய குமாரன் தன் தகப்பனுடைய சொத்தில் தனக்குரிய பங்கைக் கொடுக்குமாறு தகப்பனிடம் கேட்டான். தகப்பன் அநேக அறிவுரைகளைச் சொல்லியும் அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மகனுடைய மனதை நோகடிக்க விருப்பமில்லாமல் சொத்தில் அவனுடைய பங்கைப் பிரித்துக் கொடுத்துவிட்டான். பணத்தை வாங்கிக் கொண்டு தன் நண்பர்களோடு உல்லாசமாக இருக்கும்படி தூரதேசத்துக்குச் சென்றுவிட்டான். பணமிருந்தால் சொந்த பந்தங்களோடு நண்பர்களும் சேர்ந்து வருவார்கள் என்பது உண்மை தானே! எல்லோருடனும் சேர்ந்து சொத்து முழுவதையும் அழித்து விட்டான். அப்பொழுது தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. எனவே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. இருந்த பணமும் போனது; நண்பர்களும் போய்விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தான். அப்பொழுது குடியானவன் ஒருவன் அவன் மீது இரக்கப்பட்டு தன் வயலில் பன்றிகளை மேய்க்கும்படி சொன்னான். இவன் தனக்கு சம்பளம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு பன்றி மேய்க்கச்சென்றான். ஆனால் தேசத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டதால் பன்றிகளை மேய்க்கச் சொன்னவனுக்கு சம்பளம் கொடுக்க இயலாமற் போயிற்று. இளையகுமாரனோ, சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்பட வேண்டியதாயிற்று. “பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்” என்று சொல்வார்களே அது போல அவனுடைய பசியை நிரப்பிக்கொள்ள பன்றியின் உணவைத் தவிர வேறு உணவே இல்லை. ருசியான சாப்பாடும் பறந்தது. அவனுடைய வெட்கம் பறந்தது; தன் தகப்பன் வீட்டில் அனுபவித்த எல்லா சுகமும் பறந்தது; பன்றியின் உணவைக் கூட அவனுக்கு சாப்பிட யாரும் கொடுக்கவில்லை.
சில சமயங்களில் இறைவனே நேரில் வந்து புத்திச் சொன்னாலும் சில மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களே தங்கள் தவற்றை உணர்ந்து திருந்த வேண்டும். அது போல, தகப்பனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டு தூர தேசம் போன இளையமகனுக்கு இப்பொழுது தான் சுய புத்தி தெளிந்தது. “ஐயோ என் தகப்பன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரர்கள் சாப்பிட்டு திருப்தியாக இருக்கும் போது, நான் ஏன் பசியால் சாக வேண்டும்?” என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. ” நான் என் தகப்பன் வீட்டிற்கு திரும்பிப் போவேன். என் பாவங்களை எனக்கு மன்னித்து ஒரு வேலைக்காரனாக என்னை ஏற்றுக் கொள்ளுமாறு என் தகப்பனிடம் விண்ணப்பம் பண்ணுவேன்” என்று தீர்மானித்தான். உடனே தன் தேசத்துக்கு, தன் தகப்பன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். மகன் வருவதை தூரத்திலிருந்தே அறிந்து கொண்ட தகப்பன், மனதுருகி ஓடி வந்து மகனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். உடனே இளையமகன், ” தகப்பனே நான் உமக்கும் இறைவனுக்கும் விரோதமாக பாவம் செய்தேன். என்னை உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல; என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டான்.
உடனே தகப்பன் “என் மகன் மரித்தான் அவன் இப்பொழுது பிழைத்தான்; வாருங்கள் நாம் கொண்டாடுவோம்” என்றான். தகப்பன் அவனை மன்னித்து அவனுக்கு உயர்ந்த அங்கியை உடுத்தி ஒரு மோதிரத்தையும் பாதரட்சைகளையும் அணிவித்தான். ” கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோசமாயிருப்போம்” என்றான். இதைக் கண்ட மூத்த மகன் கோபமடைந்தான். அப்பொழுது தகப்பன் அவனை ஆறுதல் படுத்த ” மகனே நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியது எல்லாமே உனக்குரியது. உன் தம்பியோ காணாமல் போனான்; இப்பொழுது திரும்பி வந்திருக்கிறான். எனவே நாம் சந்தோசமாயிருப்போம்” என்றான்.
இதை வாசிக்கிறவர்கள் நீங்கள் யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இளைய குமாரனைப் போல இருக்கிறீர்களா? இல்லை, மூத்த குமாரனைப்போல இருக்கிறீர்களா? இளைய குமாரன் சிலகாலம் ஊதாரியாக இருந்தாலும் தன்னுடைய தவறை உணர்ந்து திரும்பி வந்து குடும்பத்துக்கு சந்தோசத்தை கொடுத்தான். ஆனால் மூத்த குமாரனோ தன் சொந்த தம்பி திரும்பி வந்ததை எண்ணி சந்தோசப்படாமல் மீண்டும் சொத்தில் பங்குக்கு வந்து விட்டானே என்று மனம் நொந்து போய்விட்டான். அன்பில்லாதவனாக நடந்து கொண்டான்.
இந்த உவமையின் மூலம் சில நல்ல கருத்துக்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். இறைவனாகிய தகப்பனின் சொத்தாகிய ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு இளையமகனைப்போல இறைவனை விட்டு தூரமாகப் போய் இறைவனை மறந்துத் தன் இஷ்டம் போல வாழ்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். பணம் போனால் பத்தும் பறந்து போய்விடும். ஒரு காலக்கட்டததில அவர்கள் நம்பின அனைவரும் தங்கள் வேலையைப் பார்த்துப் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த சூழ்நிலையில் தனக்கு உதவி செய்யவும் தாங்கள் இழந்து போன ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் இறைவனாகிய தகப்பனிடம் திரும்பி வரும்போது அவர்களை அரவணைத்து ஆசீர்வதித்து அவர்களுக்கு விருந்தாகிய நித்திய வாழ்வை கொடுத்து தகப்பன் மகிழுவார்.
போதனை : மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டென்று வேதம் சொல்லுகிறது. நாம் எப்பேர்ப்பட்ட பாவியாக இருந்தாலும், மனம் திரும்பி தகப்பனாகிய இறைவனிடம் வரும்போது நம்மை அரவணைத்து ஆசீர்வதிப்பார்; சந்தோசத்தை அள்ளி வழங்குவார்.
ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, நான் உம்மை விட்டு என் உள்ளத்தில் தூரமாகப்போய் விட்டேன். என் மனம் எனக்கு இஷ்டமானவைகளையே சிந்திக்கிறது. என்னை மன்னித்து உம் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை எனக்குத்தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
As always we gathered together at the feet of our Lord to start the New Year 2009 in Atlanta Tamil Church. The watchnight service was held on Dec 31st at 10:30 P.M. Lot of church members made it to the service. The service started with the church choir leading us in songs and followed by worship. God has been so graceful to each one of our church members throughout the past year 2008. Most of the Church members shared their testimonies by praising God and how he has been a blessingto them thorugh out the year 2008.
We had many new members come and participate in the New Year service. The promise of our Lord for the Atlanta Tamil Church and its members in this year 2009 is found in the book of Isaiah, Chapter 54, verse 10.
Though the mountains be shaken
and the hills be removed,
yet my unfailing love for you will not be shaken
nor my covenant of peace be removed,”
says the LORD, who has compassion on you.
- NIV
May this promise dwell in us throught out this year and may it be a blessing for each one of us. During the service we had the holy communion. Here are some of the photos from the watchnight/New Year service.
The service was followed by fellowship time with coffee and doughnuts offered by the church.
The annual Christmas celebration service was held on Dec 25th, Thursday at 10:30AM in the KCPC downstairs worship hall. The master of ceremonies for the service was Sis. Sheeba Immanuel and the service was started with the opening prayer by Pastor. Palmer Paramadhas which was followed by the welcome address by Joint. Secretary. Bro. Ajoy. Lots of new families attended the service and in the account of about 87 adults and 47 kids in total attended the service.
The Choir and the Worship Team sang Christmas songs and prepared the congreation for Praise and Worship. The worship was led by Bro. Daniel and the Church Choir. The Church choir members were at their best along with the muscians led by Bro. Ajoy. Later Bro. Daniel read the church announcements followed by a special Christmas Message ” Fear Not! Fear Not! Fear Not! ” by Pastor. Palmer Paramadhas. The message was a blessing to everyone who attended the service.
After the offering was taken, Bro. Alfred, Treasurer read the 2008 financial report and was followed by Bro. Antony, Chairman presenting the 2008 Annual Report. The service was brought to an end by the prayer by pastor and the vote of thanks by Bro. Vasanth, Secretary of the Church committee.
Finally the moment arrived that was much awaited by the kids in the church. Santa claus arrived from North Pole just on time to give the kids their presents. All the children got thier gifts from Santa. After the service all the church members gathered outside for the annual photo shoot and it was followed by lunch provided by the Atlanta Tamil Church.
As part of the 2008 Children’s Christmas program, the annual report for the sunday school was presented by Sis. Portia Sam. Here is a brief synopsis from it.
The Atlanta Tamil Church Sunday School Ministry accomplished its goal for the year 2008. It was a Great success! We started this year as one teacher teaches for the entire month with one topic with related memory verse and song. This went very well by all your prayers. We got 11 volunteers to teach for each month. Here is the list of teachers and the topic they taught for the past 11 months.
Jan - Mrs. Portia Sam (Topic: Parables in Bible)
Feb- Mrs. Sheeba Immanuel (Topic: God’s Love)
Mar - Mrs. Susie Palmer (Topic: Following Jesus)
Apr - Mrs. Sharu Selwyn (Topic: Mission Trip and Missionaries)
May -Mrs.Grace Punitha Arun (Topic: Miracles of Jesus)
Jun - Mrs. Golda Stephen (Topic: Thanking & Praising)
Jul - Mrs. Patricia Vasanth (Topic: Obedience)
Aug- Mrs. Vanitha Moses (Topic: Church and church behaviors)
Sep- Mrs. Sundari Britto (Topic: Victory)
Oct- Mrs. Lovelin Kingsley (Topic: God’s Creation)
Nov & Dec - Mrs.Joni Ajoy (Christmas Programs practise)
Apart from regular Sunday school Classes, this year …
We organized Easter egg hunt on Easter Sunday. Around 20 children participated in the egg hunt.
VBS 2008 was held during the week of July 28th, 2008. This being the first time from Atlanta Tamil Church, God blessed this VBS abundantly by reaching it to children about God within a week. Around 15 children attended the VBS.
To enrich this children Ministry, Pastor.Palmer, Sis.Susie Palmer and Sis.Portia Sam attended a conference conducted by Children Education Ministries of IPHC on May 8, 2008.
On Dec 21st, 2008, we celebrated the Annual Christmas celebrations. Teachers, Children and parents put all their efforts to make this a great celebration.
Children were excited about knowing God from different people and learning songs and memory verses for the year 2008. God is blessing this ministry day by day to reach our kids to God to the fullest.
Also in the coming year 2009, we are planning to have 2 classes for children as Juniors and Intermediate. This is a growth we seen from past years.
It has been a blessed Christmas season this year. All of the carolers from Atlanta Tamil Church including the young and the old, visited the home of the fellow church members to sing praises to our Lord and spread the Good News of his birth. The carol singing started the last week of November and it conclued on Dec 20th. We covered the following areas Marietta, Suwanee, Dallas, Roswell, Lilburn, Norcross, Lawrenceville, Decatur, Dunwoody and many more this year.
See some of the photos here
We thank God for keeping all of our carolers safe during the travel to various homes and providing us with beautiful weather throughout the season. May God bless all those who participated during the carols and especially the children who were lending the vocal talents to join the elders in wishing the members Merry Christmas.